இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லர் வெளியான 20 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. இதே நிலையில் இந்த ட்ரெய்லருக்கு 1.2 கோடி லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. இதுவரை இந்த ட்ரெய்லர் 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.