Home சினிமா செய்திகள் சூப்பர் ஸ்டாரை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை… யாருன்னு தெரியுமா? நீங்களே பாருங்க…!!!

சூப்பர் ஸ்டாரை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை… யாருன்னு தெரியுமா? நீங்களே பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கடின உழைப்பால் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதனையடுத்து, இவருடன் 18 படங்களில் ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி ஆவார். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியான மூன்று முடிச்சு, 16 வயதினிலே, போக்கிரி ராஜா மற்றும் பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், அந்த காலகட்டத்தில் இவர் நடிகர் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கினாராம். அதன்படி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்திற்காக ஸ்ரீதேவி 5000 மற்றும் ரஜினிகாந்த் 2000 சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.