மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பைக்கில் பயணிக்கும்போது அவருடைய துப்பட்டா சக்கரத்தில் சிக்கியுள்ளது. உடனே அப்பெண் பைக்கை நிறுத்தியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்தால் அப்பெண்ணின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.https://www.instagram.com/reel/C-5yHqpyfMt/?
பைக்கின் முன்புறம் பொருத்தப்பட்ட செல்போனில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. அதனை அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘பெண்கள் பைக் ஓட்டும்போது துப்பட்டா அணிய வேண்டாம்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.