Home செய்திகள் ஆந்திர மாநிலம்…நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்களா…!!!

ஆந்திர மாநிலம்…நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்களா…!!!

by Sathya Deva
0 comment

ஆந்திர மாநில அரசியலில் முட்டை பப்ஸ் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த சமயத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டு வந்துள்ளது என்று தெலுங்கு தேசம் குற்றம் சாட்டியுள்ளது. ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 2019 முதல் 2024 வரை ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தது.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு கட்சியிடம் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார் ஜெகன்.

சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனது முதல் தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக ஜெகன் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தான், ஜெகன் மோகன் ஆட்சிக்காலத்தில் 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, வருடத்துக்கு ரூ.72 லட்சதுக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்குதேசம் கட்சி கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.