கோயம்புத்தூர் மாவட்டம் சோமயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முதல்வர் உடனடியாக வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் அந்த பள்ளிக்கு சென்று அணை பள்ளி முழுவதிலும் சோதனை செய்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பள்ளியில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இது வதந்தி என தெரிவித்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.