64
மும்பையை சேர்ந்த ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் என்ற மருத்துவர் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று கவனித்த போது ஒரு மனித கைவிரல் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சடைந்த மருத்துவர் ஐஸ்கிரீமுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இந்திய உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய ஆணையம் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமத்தை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.