பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு உணவு கொடுக்கப்பட்ட போது ஒரு பயணியின் உணவில் கூர்மையான கத்தி துண்டு கிடந்துள்ளது. கடந்த பத்தாம் தேதி நடந்த இந்த நிகழ்வை அந்தப் பயணி சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை மேற்கொண்டு உறுதிப்படுத்தியது.
அது காய்கறிகளை வெட்டும் இயந்திரத்தின் பாகம் என்பது தெரிய வந்த நிலையில் இனிவரும் நாட்களில் இதுபோன்ற நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவோம் என ஏர் இந்தியா தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
“வேலை வாங்கி தாரேன்” Instagram நட்பால் பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!