105
தமிழக முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜான் பாட்ஷா நேற்று இரவு உயிரிழந்தார். 150க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மருத்துவர்கள் இரவு பகலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.