Home செய்திகள் ஆந்திராவில் கனமழை…முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதி அறிவிப்பு…!!!

ஆந்திராவில் கனமழை…முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதி அறிவிப்பு…!!!

by Sathya Deva
0 comment

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கொட்டி தீர்க்கும் கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.

மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழை காரணமாக தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ₹50 லட்சம் வழங்குவதாக ஆந்திரா துணைமுதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு ஆகியோர் அறிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.