மீனம் ராசி அன்பர்களே…! சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.
என்ன ஒன்று முன்கோபம் படுவீர்கள். சில விஷயம் தாமதமாக நடக்கும் பயப்பட வேண்டாம். கண்டிப்பாக இறுதியில் நல்லது நடக்கும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். தடைகளை தாண்டி தான் முன்னேறி செல்ல வேண்டி இருக்கும். நட்பால் நல்லது நடக்கும். வெற்றிக்காக கடுமையாக போராடுவீர்கள். உடல் உடல் பிணி இருக்கும். வாய்வு சம்பந்தப்பட்ட உணவுகளை தயவு செய்து உன்ன வேண்டாம். சோதனைகளை எல்லாம் தாண்டி கண்டிப்பாக வெற்றி காண முடியும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பணத்தட்டுப்பாடு இருந்தாலும் மாறும். குடும்பத்தில் சந்தோஷம் குறை இருக்காது. பிறந்து சென்ற குடும்பம் கூட கண்டிப்பாக ஒன்று கூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபம் ஒரு பக்கம் இருக்கும். குழந்தைகள் சொன்ன சொல்லை கேட்பதில் மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கொஞ்சம் கால அவகாசத்தில் பிள்ளைகளால் சாதிக்க முடியும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதையும் இருக்கும். பெண்களுக்கு நித்திரையில் தெய்வீக சம்பந்தமான கனவு வரும். திருமணம் வயது அடைந்த பெண்களுக்கு நல்ல வரன் வரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும்.
மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள். நன்கு படியுங்கள் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் சிரமம் பட்டாலும் சிறப்பாக வாழ முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஒன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.