மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி போன்ற பல பகுதிகளில் கனமழையும், சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்துகொண்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 87 அடியாக இருந்த நிலையில் இன்று 88.50 அடியை எட்டியுள்ளது. மேலும் சேர்வலாறு அணையில் 100 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 77.49 அடியாகவும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதை தொடர்ந்து கார் பாசனத்திற்கு 804 கன அடி நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.