Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…!! மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும்…!! பிறருக்கு உதவி செய்து கொடுப்பீர்கள்…!!

தனுசு ராசிக்கு…!! மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும்…!! பிறருக்கு உதவி செய்து கொடுப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். துணிச்சல் மிக்க வேலைகளையும் நீங்கள் செய்வீர்கள். நினைத்த காரியமும் வெற்றியை கொடுக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்.

உடல் ஆரோக்யத்தில் கவனம் கொள்ள வேண்டும். நல்ல உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காரத்தை உணவில் குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் வெண்பூசணி சாறு எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் மனஅமைதி பெறும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். நினைத்த வாழ்க்கை அமைந்துவிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அதிர்ச்சிக்கு ஆளாவீர்கள். மாணவர்கள் எதிலும் துணிவுடன் ஈடுபடுவார்கள். கல்விக்காக எந்த வொரு விஷயத்தையும் செய்வார்கள். கடின உழைப்புக்கான பலனை ஏற்படுத்தக்கூடும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வருவது நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பிரவுன் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.