கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் குருமூர்த்தி என்பவர் புதுநகர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை புதுவை தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இந்நிலையில் குருமூர்த்திக்கு மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவரது குடும்பத்தினர் சென்னை தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த அவருடன் பணியாற்றிய கடலூர் உட்கோட்ட பிரிவு காவல்துறையினர் குருமூர்த்தி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோவிலில் வைத்து பிராத்தனை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.