கிருஷ்ணகிரி மாவட்டம் காரியபெருமாள் வலசை கிராமத்தில் வசித்து வந்த அலமேலு(48) என்பவருக்கு ஏழுமலை, சேட்டு என 2 மகன்கள் உள்ளனர். கூலி தொழில் செய்து வரும் ஏழுமலை என்பவருக்கு அலமேலு அவரது அண்ணனுடைய மகளான பவித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு 1 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் பவித்ராவிற்கும் அவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் கல்லூரி படிக்கும் மாணவரான மணிகண்டனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த அலமேலு அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இருவரும் கள்ளக்காதலை கைவிடவில்லை.
சம்பவத்தன்று காலையில் ஆடு மேய்க்க சென்ற பவித்ரா வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்ப வராததால் அலமேலு அவரை தேடி சென்றுள்ளார். அப்போது ஆடு மேய்க்கும் இடத்தில் பவித்ராவும் மணிகண்டனும் தனியாக பிறந்தநாள் கொண்டாடியதை பார்த்து ஆத்திரமடைந்த அலமேலு அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா மற்றும் மணிகண்டன் அலமேலுவை அடித்து கொலை செய்து அவரின் உடலை எரித்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அலமேலுவின் இளைய மகனான சேட்டு அம்மாவை காணவில்லை என அவரை தேட தொடங்கியுள்ளார்.
அப்போது காட்டு பகுதியில் தீ எரிவதை கண்டு அங்கு சென்று பார்த்தபோது அலமேலுவின் உடல் பாதி எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சேட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அலமேலு உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி அலமேலுவை கொலை செய்த மணிகண்டன் மற்றும் பவித்ராவை கைது செய்தனர்.