Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! வாழ்க்கை தரத்தை கண்டிப்பாக உயர்த்துவீர்கள்…!! யோகமான நல்ல பலன் கிடைக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! வாழ்க்கை தரத்தை கண்டிப்பாக உயர்த்துவீர்கள்…!! யோகமான நல்ல பலன் கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! புண்ணிய ஸ்தல பயணங்களால் நன்மை உண்டாகும்.

ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் இறங்க மாட்டீர்கள். பிறரை கட்டளை இடுகின்ற அரசு உயர் பதவி கிடைக்கும். உங்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு மற்றவர்கள் நடந்து கொள்வார்கள். இன்று உங்களுக்கு காரிய வெற்றி ஏற்படும். தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். மனம் மகிழும் செய்தி கண்டிப்பாக வரும். போட்டிகள் விலகி செல்லும். தடைப்பட்ட பண உதவி கண்டிப்பாக கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் பிடிக்கும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்களுடைய ஆலோசனை கேட்டு நடப்பார்கள். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள்.

வாழ்க்கை தரத்தை கண்டிப்பாக மேம்படுத்துவீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் ஏற்படும். முடிவுகளில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் மணமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். குழப்பம் வேண்டாம். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.