கடகம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது கடுமையாக இருக்கும்.
பயனில்லாத வகையில் சிலர் பேசுவார்கள். சொந்த பணியில் அக்கறை கொண்டு செய்வது நல்லது. தேவையில்லாத விவகாரங்களில் விலகி இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருந்து தடைகள் விலகும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்ற வேண்டும். வெளிநாடு செல்ல விரும்புவோர் சற்று காலத்திற்கு தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் சொற்களை சாதாரணமாக எடுப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி இருக்கும். பிள்ளைகள் நளினில் அதிக அக்கறை இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். கோபத்தை குறைத்து நிதானமாக செயல்படுவது நல்லது. பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம். நிர்வாகத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். பெண்கள் பிரச்சினைகளை சந்தித்தாலும் வெற்றி பெறுவீர்கள்.
காதலைப் பொறுத்தவரை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பது நல்லது. முடிவுகளை மிகத் தெளிவாக எடுப்பது நல்லது. காதல் கைகூடுமா கூடாதா என்று யோசித்து பார்த்து செயல்பட வேண்டும். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். சுறுசுறுப்பு மேலோங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.