கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரின் மூத்த மகளான தான்யா ஸ்ரீ வீட்டின் வெளிய நின்று விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த தெரு நாய் அவரை துரத்தி கடித்துள்ளது. தான்யா ஸ்ரீயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜோதி உடனடியாக நாயை துரத்த முயன்றுள்ளார்.
ஆனால் அந்த நாய் ஜோதியையும் கடித்து குதறியது. இதை பார்த்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அனைவரும் இணைந்து அந்த தெருநாயை துரத்தி ஜோதி மற்றும் தான்யா ஸ்ரீயை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிப்பவர்கள் பொதுமக்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் வகையில் உள்ள தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.