விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகமாக காணப்படுவதால் அந்த பகுதியில் மாம்பழக்கூழ் தொழிச்சாலை அமைக்க வாய்ப்புகள் இருக்கிறதா? அதற்கு அரசு உதவு செய்யுமா என ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் கேள்வி ஒன்றை எழுப்பினர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், பொதுவாக மாம்பழக்கூழ் தயாரிப்பதற்கு அல்போன்சா, பெங்களூரா வகை மாம்பழங்கள் பயன்படுத்தப்படும். அந்த மாம்பழங்கள் ராஜபாளையத்தில் விளைவதில்லை என்றும், அங்கு விளையும் மாம்பழங்கள் மாவட்டத்திலேயே விற்பனையாகி விடுவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் புதிய தொழில் தொடங்க விருப்பம் உள்ள இளைஞர்கள் அரசின் உதவியோடு மானிய கடன் பெறுவதற்கு மாவட்ட தொழில்லை அலுவலகத்திற்கு சென்று தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்று கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.