தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்ட சபையில் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருக்கும் போது நூலகத்தின் பெருமையை பற்றியும் அறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் அவர்கள் புத்தகத்தின் மீது வைத்திருந்த பற்று குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பெயரால் பால்வேறு வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இளைய தலைமுறையினர் பயன்படும் வகையில் பல நூலகங்களை விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.