கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய வழக்கில் காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (எ) கன்னுகுட்டி, அவர் மனைவி விஜயா, தாமோதர, விரியூர் ஜோசப் (எ) ராஜா, சேஷசமுத்திரம் சின்னத்துரை ஆகிய 5 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். இதனையடுத்து மெத்தனால் சப்ளை செய்ததாக சென்னையை சேர்ந்த சிவகுமார், கவுதம், பன்சிலால், சேஷசமுத்திரத்தை சேர்ந்த செந்தில், ஏழுமலை, புதுவையை சேர்ந்த மாதேஷ் என மொத்தம் 16 பேரை கைது செய்தனர்.
அவர்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்கும் நிலையில் அதில் 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து வவிசாரிக்க கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். மேலும் இன்று இந்த மனுக்கான விசாரணை நடைபெற உள்ளது.