Home செய்திகள் சந்தேகப்படும்படி நின்ற பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினர் நடவடிக்கை….!!

சந்தேகப்படும்படி நின்ற பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினர் நடவடிக்கை….!!

by Gayathri Poomani
0 comment

திருப்பூர் மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் இம்மாவட்டத்தின் மாநகர மதுவிலக்கு காவல்துறையின் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, ரமா அனிதா, ஏட்டுகள் சரவணன், முகமது சபி ஆகியோர் சேர்ந்த குழுவினர் ரயில் நிலையம் எதிரே இருக்கும் தலைமை தபால் நிலையம் முன்பாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார். பின்னர் அவரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது.

அந்தப் பையில் மொத்தமாக 7 கிலோ 600 கிராம் எடை மதிப்புடைய கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதை ஆந்திராவில் இருந்து இவர்கள் மூன்று பேரும் மொத்த விலைக்கு வாங்கி ரயில் மூலம் திருப்பூரில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் ஆனைகட்டி பகுதியில் வசிக்கும் அமீர், கோழிகோட்டை பகுதியில் வசிக்கும் முகமது சபீர் பாஷா மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இதில் முருகேஸ்வரி மற்றும் அமீர் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகர மதுவிலக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அமீர், முருகேஸ்வரி மற்றும் முகமது சபீர் பாஷா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஏழு கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.