திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட்டிற்கு செல்லும் பிரதான சாலையில் கொள்ளிடம் பாலம் உள்ளது. இந்நிலையில் அந்த பாலத்தின் சிமெண்ட் தடுப்பு சுவரில் வாலிபர் ஒருவர் வேகமாக ஏறி அவரது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினர். இதனையடுத்து அவர் தண்டால் எடுக்க தொடங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் இளைஞர் கீழே விழுந்து விடுவார் என பதறிப்போய் அவரை கீழே இறங்கி வர கூறினர்.
இதனையடுத்து அந்த வாலிபர் கீழே இறங்கி சென்றுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதற்காக அவர் செய்த இந்த காரியம் அப்பகுதியில் பரபரப்பை ஈடுபடுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.