குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஓன்று புறப்பட்டு வந்துள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் அமர்நாத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். அதன்பின் திருச்சிக்கு அடுத்ததாக இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் தனியார் பள்ளி அருகாமையில் பாலம் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் காரணத்தால் அப்பகுதியில் வரும் போக்குவரத்தை சர்வீஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டுள்ளது. அந்நேரம் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் வந்த அஜின்மோன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் பயணிகள் எட்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த அஜின்மோன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அஜின்மோன் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். மேலும் இந்த விபத்து காரணத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்களிடே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான பேருந்தை காவல்துறையினர் மீட்டு போக்குவரத்தை சரி செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.