இங்கிலாந்தில் ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரரான அலெசாண்டர் வுகிச் மற்றும் அமெரிக்காவின் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியா வீரரை வீழ்த்தி டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் டெய்லர் பிரிட்ஸ் உடன் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்பர்செல் மோதவுள்ளார்.