சென்னை கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ராகேஷ் என்பவர் அம்பத்தூர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வாட்ஸ்அப்பில் இவர் மற்றும் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போலியான புகைப்படம் மற்றும் வீடியோ வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியில் இருந்த ராகேஷை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தங்களுக்கு 1.20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட போகவதாக கூறி மிரட்டியுள்ளனர். இதனை கேட்டு பதறிய ராகேஷ் உடனடியாக அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 1 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து ராகேஷ் இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.