Home செய்திகள் “என் கணவர் தான் காரணம்”… போலீசாருக்கு சிக்கிய கடிதம்… 2 பேர் கைது…!!

“என் கணவர் தான் காரணம்”… போலீசாருக்கு சிக்கிய கடிதம்… 2 பேர் கைது…!!

by Revathy Anish
0 comment

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் விஜயசாந்தி(41) தனது 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரின் சம்பளத்தை அவரது தங்கை கணவரான மெக்கானிக் சரவணன் என்பவர் மூலம் வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். இதனால் உறவினர் சரவணன் அடிக்கடி விஜயசந்தியின் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வந்த சரவணனுக்கு தனது மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டது தெரியவந்ததால் விஜயசாந்தியை அடித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் உறவினரான சரவணனும் கள்ளக்காதலை தொடர வேண்டும் என அவரை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த விஜயசாந்தி என் சாவிற்கு என் கணவர் சரவணனும், உறவினர் சரவணன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயசாந்தியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு சரவணனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.