நடப்பு சட்டசபை கூட்ட தொடரில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி நிலையில் தமிழக முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் தமிழக அரசு நீட் தேர்வை வைத்து கொண்டு அரசியல் செய்வதாக குறிப்பிட்டார்.
மேலும் ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் திருப்பி அனுப்பட்ட நிலையில் மீண்டும் தீர்மானம் போடுவது என்பது நடக்காத காரியத்தை கூறுவதுபோல் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவ கனவை நிஜமாக்க முடியும் என்றும், எனவே நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டும் என அவர் கூறினார்.