73
தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள சொன்னானூர் கிராமத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், தக்கலை, புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் செய்த முத்திரை, இரும்பு கலப்பையின் கொழுமுனை ஆகியவை கிடைத்துள்ளது.
விவசாயத்திற்கு பயன்படும் இந்த கொழுமுனையின் எடை 1.292 கிலோ கிராம் என தெரிவித்துள்ளனர். மேலும் இவற்றின் காலம் இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.