86
சென்னையில் இருந்து ஹைதராபாத், டெல்லி, சீரடி பகுதிகளுக்கு செல்லும் 12 விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்களும், டெல்லி, ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.