தமிழகத்தில் பல இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதாகவும், ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்த நிலையில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் அடிப்படையில் தஞ்சாவூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் சாலியாமங்கலத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரகுமான் ஆகிய 2 பேரை உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த லேப்டாப், பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.