86
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 21 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைதான மாதேஷ் என்பவர் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மெத்தனால் வாங்கியதாக கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த நிறுவங்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு நீதிமன்ற அனுமதியுடன் சம்மன் அனுப்பி ஆஜர் படுத்தப்பட்டு விசாரணை நடத்த உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.