66
இந்தோனேசியாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஜாங் ஜிஜி என்பவர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றார். 17 வயதான இவர் போட்டியில் விளையாடி கொண்டிருந்தபோது அரங்கிலே திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இதனையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே ஜாங் ஜிஜி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் மாரடைப்பினால் உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது.