Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…! சொந்த பந்தம் வருகை இன்று இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…! சொந்த பந்தம் வருகை இன்று இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு மதிநுட்பத் திறன் வெளிப்படும் நாளாக இருக்கும்.

நல்லவைகள் எல்லாம் கண்டிப்பாக நடக்கும். சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். சொந்த பந்தம் வருகை இன்று இருக்கும். குடும்பத்தினர் உங்கள் தேவையை கொடுத்து அதற்கு ஏற்றார் போல நடந்து கொள்வார்கள். உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். இன்று உங்களுக்குத் தாய் வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள்.

இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். வழக்கத்தை விட இன்று கூடுதல் செலவு இருக்கும். உத்தியோகத்தில் மிகவும் நிதானமாக பேசுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயம் கண்டிப்பாக நடக்கும். உத்தியோகத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அலைந்து திரிந்து சில பணிகளை முடிப்பீர்கள். வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப்பட்ட நிலை கண்டிப்பாக மாறும்.

மனக்கவலை இருக்கும். இந்த நாளில் புதிய மாற்றங்கள் இருக்கும். யாரிடமும் முகம் கொடுத்து பேசும் பொழுது சிரித்த முகத்துடன் பேச வேண்டும். காதலில் மனக்கசப்பு இருக்கும் முடிவு எடுக்க முடியாமல் இருப்பீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். பெண்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டதற்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும்.

மாணவர்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பார்கள். மாணவர்கள் கண்டிப்பாக சாதிக்க முடியும். கல்வியில் வெற்றி பெறுவார்கள். விளையாட்டுத் துறையிலும் வெற்றி கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் நீங்கள் எழுந்தவுடன் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.