தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின் அடிப்படையில் உணவகங்கள் மற்றும் சாலையோர பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் நடத்திய சோதனையில் ஒரு உணவகத்தில் இருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்தனர்.
இதை வைத்து தூய்மை படுத்திய 45 லிட்டர் பழைய சமையல் எண்ணெயையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கெட்டுப்போன 56 கிலோ சிக்கன் ஆகியவற்றை அழித்த அதிகாரிகள் அந்த உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து கடைக்கு சீல் வைத்தனர். மேலும் சாலை ஓரங்களில் இருக்கு பானிபூரி கடையில் இருக்கும் மசாலா மற்றும் உணவுகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.