Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! நட்பால் நல்லது நடக்கும்…! எதிலும் சிந்தித்து செயல்படுங்கள் அது வெற்றியை கொடுக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! நட்பால் நல்லது நடக்கும்…! எதிலும் சிந்தித்து செயல்படுங்கள் அது வெற்றியை கொடுக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மன தடுமாற்றம் ஏற்பட்டதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.

உங்கள் மனம் தெளிந்த நீரொளி போல தெளிவாக காணப்படும். எச்சரிக்கை மிக அவசியம். எந்த ஒரு காரியத்திலும் சம யோசிதமாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மனதிற்குள் நம்பிக்கை உண்டாகும். உபரி பணம் வருமானம் ஒரு பக்கம் வந்து சேரும். குடும்பத்தில் முக்கிய தேவைகளை நிறைவேற்ற முயற்சி அடைவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வரவு கண்டிப்பாக திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். புதிய முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து தகராறு கண்டிப்பாக விலகி செல்லும். உத்தியோகத்தில் திடீர் செலவு உண்டாகும். பண வசூல் தாமதப்பட்டாலும் வரக்கூடும். வீண அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் தேவையற்ற பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

யாருக்கும் உதவி செய்கிறேன் என்று எதுவும் செய்ய வேண்டாம். கருத்துக்களை பரிமாறும் பொழுது கவனம் அவசியம். அடுத்தவர்கள் பணியை விரைவாக செய்து முடிப்பீர்கள். நல்ல எண்ணங்கள் கண்டிப்பாக வெளிப்படக்கூடும். பெண்கள் இன்று யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் வாழ்க்கையை அற்புதமாக வாழ முடியும். காதல் பெரிய பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் வெற்றியை நோக்கி செல்லும். மாணவர்கள் முக்கிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் பொழுது கவனம் அவசியம்.

கல்வியில் முழு முயற்சியால் சாதிக்க முடியும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.