40
சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் 6 தனிப்படைகளை அமைத்து தப்பிய ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உள்பட 8 நாங்கள் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என தாமாக வந்து சரணடைந்துள்ளனர் அவர்களிடம் காவல்துறை துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.