Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்ஈரோடு “நான் தான்கடவுள் எனக்கு அபிஷேகம் செய்யுங்கள்”… சாமி சிலை மீது அமர்ந்த நபர்… வைரலாகும் வீடியோ…!!

“நான் தான்கடவுள் எனக்கு அபிஷேகம் செய்யுங்கள்”… சாமி சிலை மீது அமர்ந்த நபர்… வைரலாகும் வீடியோ…!!

by Revathy Anish
0 comment

ஈரோடு மாவட்டம் அந்தியூர் நாகலூர் பகுதியில் கோசலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிடத்தில் கலியுக ரங்கநாதன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் அதன் சுற்றுவட்டராத்தில் இருக்கும் மக்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால் ரங்கநாதர் சாமி சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு வந்த கோசலராமன் திடீரென ரங்கநாதர் சிலையின் மீது அமர்ந்துகொண்டு நான் தான் கடவுள் எனக்கு அபிஷேகம் செய்து, பூஜை செய்யுங்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கோவிலின் பூசாரியும் கோசலராமனுக்கு பால் அபிஷேகம் செய்து பூஜை செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.