கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து 12 யானைகள் கூட்டமாக வெளியே சென்ற நிலையில் அதில் சில காட்டு யானைகள் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் புகுந்து அங்கே இருந்த சணப்பை பயிர்களை சேதப்படுத்தி அதனை தின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மாலை வரை காத்திருந்து பின்னர் யானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானைகள் அங்கேயே முகாமிட்டு வெளியே வராமல் இருந்தது. பின்பு சுமார் 14 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.