சிம்மம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.
கூட்டு முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். தெய்வீக சிந்தனை மேலோங்க கூடும். நீங்கள் தேடி சென்று பார்க்க நினைத்த நண்பர். உங்களை தேடி பார்க்க வருவார்கள். வேலை நிமித்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். நல்ல வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வீர்கள். இழந்த வேலைவாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப நலன் கருதி முக்கிய விஷயத்தை செய்து முடிப்பீர்கள். நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபத்தை விட்டு விடுங்கள். உங்களுடைய கோபமே மிகப்பெரிய எதிரியாக இருக்கும். உடல் உஷ்ணம் அடையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியத்தில் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கும். வாய்வு ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். செய்ய முடியும் காரியங்களில் மட்டும் ஈடுபடுங்கள் வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேற்ற பாதை அடைவார்கள். வியாபாரம் தொடர்பான விஷயம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் உண்டாகும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்வீர்கள். தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
இஷ்ட தெய்வ வழிபாட்டை இன்று மேற்கொள்வீர்கள். மனம் போல் வாழ்க்கை அமையும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக் கொடுப்பதும் பொறுமை காப்பதும் நல்லது. காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் முக்கிய முடிவுகளை எது சரி எது தப்பு என்று யோசித்து எடுக்க வேண்டும்.
முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் நான்கு.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.