வேலூர் மாவட்டம் ஆற்காட்டான் குடிசை பகுதியை சேர்ந்த பாபு என்பவர் தனது மனைவி தமிழரசி மற்றும் மகள் அக்சயாவுடன் சென்னையில் உள்ள அவரது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மகள் அக்சயா 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த அக்சயா கடந்த 3-ஆம் தேதி அன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இவரது உடல் வேலூரில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சொந்த ஊரிலேயே இருந்த பாபு மற்றும் தமிழ்செல்வி மகளை இழந்த துக்கத்தில் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
மேலும் நான் கண்டித்ததால் தான் என் மகள் இறந்து விட்டதாக தமிழரசி தினமும் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்செல்வி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த 3-வது நாளில் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.