பெரம்பலூர் மாவட்ட துணை தாசில்தார் திருமண மண்டப தடையின்மை சான்று வழங்க 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூலை 1ஆம் தேதி பழனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நெஞ்சு வலி என்று கூறியதால் அவரை தாசில்தார் சரவணனின் பொறுப்பில் அதிகாரிகள் ஒப்படைத்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் திடீரென தப்பியோடியுள்ளார். இதுகுறித்து விசாரித்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் தப்பியோடிய பழனியப்பனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.