ஆந்திராவில் உள்ள பிரபலமான நிறுவனமான அல்ட்ராடெக் தொழிற்சாலையில் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது .இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிருக்கு காபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஃப்ரீ ஹீட்டரில் ஏற்பட்ட கோளாறு தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.