சென்னை கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். டாக்சி டிரைவரான இவர் நேற்று மெரினா கலங்கரை விளக்கம் அருகே படுத்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு நபர் தான் போலீஸ் என கூறிக்கொண்டு குமரவேலை மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த நபர் குமரவேலிடம் இருந்த 8,500 ரூபாய் பணம், செல்போன், ஆதார்கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக மெரினா குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் போலீஸ் என கூறி பணம் பிரித்த நபர் திருப்பத்தூரை சேர்ந்த விக்கினேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 8 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விக்கினேசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.