திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டி பகுதியில் இந்திராணி(83) என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது உடலுக்கு அப்பகுதியில் உள்ள திராவிட கழகத்தை சேர்ந்த பெண்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இறுதி சடங்குகள் செய்து மூதாட்டியை மின்மயானம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் பேசுகையில், ஆண்கள் செய்யக்கூடிய பணிகளை பெண்களால் செய்து கட்ட முடியும் என்றும் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியின் உடலை மின்மயானம் கொண்டு சென்று அவரது உடலை எரியூட்டினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.