திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் அன்ட்ரோ ரோமியான்தஸ் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். அன்ட்ரோ அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு கையை கழுவுவதற்கு உள்ளே சென்றார். அப்போது அந்த நபர் அந்த அறையில் மருந்து நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டி இருந்த 5 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து அன்ட்ரோ காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில் பணத்தை திருடிய நபர் கர்நாடக மாண்டியாவை சேர்ந்த ஜீவன்லால்(60) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.