கோவை ஒண்டிப்புதூர் எம்.ஜி.ஆர். காலனியில் தங்கராஜ் என்பவர் தனது மனைவி புஷ்பா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான தங்கராஜ் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே போல் புஷ்பாவிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் புஷ்பா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தங்கராஜ் தனது மூத்த மகளான ஹரிணியை வீட்டு பின்புறம் உள்ள கிணற்றில் வீசியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்பா தனது 2-வது மகள் சிவானியை அதே கிணற்றில் போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது தங்கராஜ் மதுபோதையில் இருந்ததால் அவர் எதையும் கண்டுகொள்ளாமல் அங்கேயே தூங்கிவிட்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் பிணமாக கிடந்த புஷ்பா மற்றும் குழந்தைகளை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்கராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.