இயக்குனர் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் கடந்த 2013 ம் ஆண்டு ”மதகஜராஜா” என்ற படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படம் ரிலீசாகவில்லை
. இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். விஷால் பிலிம் பேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்த சுவாரசியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் மிகவும் நெருக்கமான வட்டாரத்துக்கு மட்டும் திரையிடப்பட்டது எனவும் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.