உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பிற்கு அறிவியல் ஆசிரியராக முகமது ஆசிப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் கோடை விடுமுறையில் கொடுத்த வீட்டுப்பாடத்தை பற்றி கேட்டுள்ளார்.
அப்போது ஒரு மாணவன் மட்டும் அதனை முடிக்கவில்லை என தெரிவித்தார். இதை கேட்டு ஆத்திரமடைந்த முகமது ஆசிப் அந்த மாணவனை பிரம்பால் பயங்கரமாக அடித்துள்ளார். அந்த மாணவன் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த முகமது ஆசிப் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிப்பை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.