78
இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த முக்கியமான வீரரான சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பல அரசியல் தலைவர்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி உள்ளனர்.