114
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டு கன்னியாகுமாரி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
அதனடிப்படையில் வெற்றி பெற காரணமாக இருந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பார்ட் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.